நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் இன்று தொடங்கின

By செய்திப்பிரிவு

10 மற்றும் 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் நாடு முழுவதும் இன்று (பிப்.15) தொடங்கின.

இதில் 10-ம் வகுப்புத் தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்பில் தேர்வை எழுத சுமார் 12 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். திறன் சார்ந்த பாடங்கள் மீதான தேர்வு முதலில் நடக்கிறது. பிப்ரவரி 20-ம் தேதி வரை திறன்சார் தேர்வுகள் நடக்கின்றன. அதற்குப் பிறகே வழக்கமான மொழித் தேர்வுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களுக்காக தேர்வுகள் நடைபெற உள்ளன.

10-ம் வகுப்புக்கு மார்ச் 20 ஆம் தேதி வரையும், 12-ம் வகுப்புக்கு மார்ச் 30-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இதற்கிடையே வினாத் தாள்கள் கசிவதாக இணையத்தில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2019-ம் ஆண்டு பொதுத் தேர்வின் போது யூடியூப் மற்றும் சில சமூக வலைதளங்களில் சிபிஎஸ்இ வினாத்தாள்கள் வெளியானதாக வதந்தி பரவியது. அதை சிபிஎஸ்இ மறுத்து, அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்