10-வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'சிகரத்தை நோக்கி' கையேடு: புதுச்சேரி கல்வித்துறை வெளியீடு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக 7-வது ஆண்டாக சிகரத்தை நோக்கி கையேட்டை புதுச்சேரி கல்வித்துறை இன்று வெளியிட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி கையேட்டை வெளியிட்டார். கல்வியமைச்சர் கமலக்கண்ணன், அரசு கொறடா அனந்தராமன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக் குழந்தைகள் இந்தக் கையேட்டைப் பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து கல்வியமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகித்தை உயர்த்த கடந்த 7 ஆண்டுகளாக 'சிகரத்தை நோக்கி' என்ற கையேடு புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த முறை இக்கையேட்டை வெளியிட்டதன் பயனாக அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்ந்தது.

நடப்பாண்டும் 10-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகித்தை அதிகரிக்க, சிறந்த ஆசிரியர் வல்லுநர் குழுவால் உருவாக்கப்பட்ட 'சிகரத்தை நோக்கி' கையேடு புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் 5,478 மாணவர்களுக்குத் தரப்பட உள்ளது" என்று குறிப்பிட்டனர்.

கையேட்டில் பாடங்களுக்கான கேள்வித்தாளுடன் விடைகளும் இணைத்துத் தரப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

29 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்