1000 ரூபாயில் 5 மாதப் புள்ளிவிவர அறிவியல் படிப்பு: சென்னை ஐஐடி அசத்தல்

By செய்திப்பிரிவு

புள்ளிவிவர அறிவியல் படிப்புகளைக் குறைந்த கட்டணத்தில் அளிக்க உள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

''புள்ளிவிவர அறிவியலாளருக்குத் தேவையான கணித மற்றும் நிரலாக்கத் திறன்கள் குறித்து இந்தப் படிப்பில் கற்றுத் தரப்படும். ஆரம்பக்கட்ட நிலையில் பயிற்சிகள் வழங்கப்படும். ஐந்து மாத காலப் பயிற்சிக்கு ரூ.1000 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பொறியியல், அறிவியல், வணிகவியல் துறை மாணவருக்கும் புள்ளிவிவர அறிவியல் குறித்த அடிப்படைப் புரிதல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் இலக்கு. இயந்திர வழிக் கற்றல் உள்ளிட்ட பிரபலக் கற்றல் முறைகளில் இருந்து புள்ளிவிவர அறிவியல் தனித்தே கற்பிக்கப்படுகிறது. இந்த இடைவெளியை நீக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறோம்.

உற்பத்தி, நிதிசார் சேவைகள், சுகாதாரம், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பெரும்பாலான துறைகளில் பயிற்சி பெற்ற புள்ளிவிவர அறிவியலாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே இந்தப் பயிற்சி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

பிப்ரவரி 1-ம் தேதி முதல் இதற்கான பயிற்சி தொடங்குகிறது. padhai.onefourthlabs.in என்ற இணைய முகவரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது''.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்