அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்புத் தேர்வுக்கு அனுமதியில்லை: அரசு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என அரசுத் தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநா் சி.உஷாராணி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடந்து வரும் கல்வியாண்டில் (2019-2020) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் (தொடக்க அனுமதி பெற்று முதல் முறையாக பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் புதிய பள்ளிகள் உள்பட) அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து உறுதி செய்ய வேண்டும்.

தேர்வு மையங்களாகச் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதில் தவறு நடந்தால் தாங்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஜனவரி 27-ம் தேதிக்குப் பிறகு பெறப்படும் எந்த ஒரு திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தேர்வு மையப் பட்டியலில் அவற்றின் இணைப்புப் பள்ளிகளின் விவரங்களும் விடுதலின்றி இடம்பெற்றுள்ளன தேர்வு மையப் பட்டியலில் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட தேர்வு மையங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல், தேர்வு மைய பட்டியலில் அங்கீகாரம், தொடக்க அனுமதி பெறப்படாத எந்த ஒரு பள்ளியும் இடம்பெறவில்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

வலைஞர் பக்கம்

10 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

57 mins ago

சினிமா

16 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்