ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு: 9 பேர் சதம் எடுத்து சாதனை

By செய்திப்பிரிவு

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 9 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாடு முழுவதும் 233 நகரங்கள் மற்றும் வெளிநாட்டில் ஜனவரி 7 - 9 வரை 6 கட்டமாக ஜேஇஇ மெயின் தேர்வு நடந்தது. 8.69 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். 6.04 லட்சம் மாணவர்கள், 2.64 லட்சம் மாணவிகள், 3 திருநங்கைகள் இத்தேர்வில் கலந்துகொண்டனர்.

ஜேஇஇ மெயின் தேர்வுக்காக 570 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 9 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். டெல்லி, குஜராத் மற்றும் ஹரியாணாவில் தலா ஒருவர், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் தலா இருவர் என 9 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ மேல்நிலைத் தேர்வு (JEE- Advanced) ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஜேஇஇ மேல்நிலைத் தேர்வை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

வணிகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்