புதுச்சேரி பள்ளிகளுக்கு 8 நாட்கள் தொடர் விடுமுறை; தமிழகத்தில் எப்படி?

By செய்திப்பிரிவு

புதுச்சேரி பள்ளிகளுக்கு, ஜன.13-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு, 8 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 14,15,16,17 ஆகிய தினங்கள் முறையே போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. 18 மற்றும் 19-ம் தேதி வழக்கமான சனி, ஞாயிறு விடுமுறை ஆகும்.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை (ஜன.13) அரசு விடுமுறை விடவேண்டும் என்று பெற்றோர், மாணவர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை ஜன.13-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ''பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.13-ம் தேதி (திங்கட்கிழமை) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை நாள் பிப்ரவரி 8-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக்கப்பட்டு ஈடு செய்யப்படும்'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை மூலம் ஜன.12-ல் இருந்து ஜன.19 வரை பள்ளிகளுக்கு 8 நாட்கள் பொங்கல் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற அறிவிப்பு தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து வெளியாகுமா என்பதே பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்