செய்திகள் சில வரிகளில்: ‘பானிபட்’ படத்துக்கு மகாராஷ்டிராவில் வரி விலக்கு

By செய்திப்பிரிவு

இந்தியில் இயக்குநர் அஷுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் வெளியான ‘பானிபட்’ திரைப்படத்துக்கு மகாராஷ்டிர அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

இது 1761-ம் ஆண்டு நடந்த 3-ம் பானிபட் போரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட வரலாற்றுத் திரைப்படம். இதை சுனிதா கோவாரிகர் மற்றும் ரோகித் ஷெலட்கர் தயாரித்துள்ளனர்.

இதில் அர்ஜுன் கபூர், சஞ்சய் தத், கீர்த்தி சனோன் ஆகியோரின் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த டிசம்பர் 6-ம் தேதி வெளியானது.

இந்நிலையில் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதவில், ‘‘மரியாதைக்குரிய முதல்வருக்கு இதயங்கனிந்த நன்றி. எங்கள் முயற்சியில் மராட்டிய புகழான பானிப்பட்டை திரையில் கொண்டு வந்துள்ளோம்.

அதற்கு வரி விலக்கு அளித்தமைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளது.

- பிடிஐ

ஒடிசாவில் காந்தி தங்கியிருந்த இடத்தில் அருங்காட்சியகம்

கேந்திரபாரா

சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மா காந்தி ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். அது தற்போது சீரமைக்கப்பட்டு காந்தியின் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.

இந்த விருந்தினர் மாளிகை காலனியாட்சியின் போது காராபூரில் மாவட்ட நீதிபதி இல்லத்தின் அருகே இருந்தது. அப்போது காந்தி 1934-ல் மேற்கொண்ட பாத யாத்திரையின்
போது 3 நாட்கள் இங்கு தங்கியுள்ளார். எனவே இந்த மாளிகையை காந்தி அருகாட்சியகமாக மாற்ற ஒடிசா அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த அருங்காட்சியத்தில் புகைப்பட காட்சிக் கூடம், நூலகம், மாநாட்டு அரங்கு அமைக்கப்பட உள்ளது. மேலும் காந்தி பயன்படுத்திய கட்டில், மரச்சாமான்கள் அனைவரின் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன” என்றார்.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

6 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

4 mins ago

சினிமா

22 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

16 mins ago

சினிமா

27 mins ago

சினிமா

30 mins ago

வலைஞர் பக்கம்

34 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

44 mins ago

மேலும்