ஆங்கில தேர்வில் தேர்ச்சியை கட்டாயமாக்க கூடாது: மத்திய இணை அமைச்சர் விளக்கம்

By செய்திப்பிரிவு

ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்க கூடாது என்று மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் கருத்து தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள எல்ஜி கல்லூரியில் ‘ தரமான கல்வி மற்றும் ஆசிரியர்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பேசியதாவது:

“தற்போதைய கல்வி முறை, தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கும் பட்டம் பெறுவதற்கும் மட்டுமே பயன்படுகிறது. இந்த வழிமுறைகள் அறிவைப் பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமில்லை என்று பிஹாரின் முன்னாள் முதல்வர் கபூரி தாகூர் ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் எடுத்தது சரியான முடிவுதான். மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும்தான். ஆனால், அதை தேர்வு முறைகளில் கொண்டு வந்து தேர்ச்சி பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்க கூடாது.

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவர்களின் ஆங்கில கலாச்சாரம் இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. எனவேதான், குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் ஒழுக்கம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகள் மாணவர்கள் கிடைக்கும்.

புதிய கல்விக் கொள்கை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. ஒருங்கிணைந்த ஊதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் உதவி பெறாத கல்விக் கொள்கையின் கீழ் பணிபுரிபவர்களின் பிரச்சினைகள் குறித்து பிஹார் அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் அஸ்வினி குமார் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

37 mins ago

வணிகம்

52 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்