வேலை கிடைக்கும் வகையில் உயர் கல்வியைத் திட்டமிடுங்கள்: ராஜஸ்தான் ஆளுநர்

By செய்திப்பிரிவு

வேலை கிடைக்கும் வகையில் உயர் கல்வியை அளிக்கத் திட்டமிடுங்கள் என்று ராஜஸ்தான் ஆளுநர், பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கு மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பில் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கலந்து கொண்டார். விழாவில் இதுதொடர்பாகப் பேசிய அவர், ''உயர் கல்வித் துறை கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதாக இருக்க வேண்டும்.

மாணவர்களும் ஆசிரியர்களும் உயர் கல்வியில் புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும். நமது நாட்டில் ஏராளமான தகுதி வாய்ந்த மாணவர்கள் இருக்கின்றனர். எனினும் உயர் கல்விக்கான சர்வதேச மதிப்பீட்டில் நாம் பின்தங்கியே உள்ளோம்.

சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு உயர் கல்வித் துறையில் தேவையான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் அடிப்படைக் கடமைகள் என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்கள் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தரமான வேலை கிடைக்கும் வகையில் உயர் கல்விக்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக 90 பல்கலைக்கழகங்களும் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும்'' என்றார் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்