ஆராய்ச்சிப் படிப்பு உதவித்தொகை அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

தேசிய தகுதித்தேர்வில் (நெட்) தேர்ச்சி பெறும் ஆராய்ச்சி பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஆராய்ச்சிப் படிப்புக்கான கல்வி உதவித் தொகையை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உயர்த்தி உள்ளது. இதில் இளநிலை ஆய்வாளருக்கு (ஜேஆர்எப்) ரூ.24,800-ல் இருந்து ரூ.31 ஆயிரமாகவும், முதுநிலை ஆய்வாளருக்கு (எஸ்ஆர்எப்) ரூ.27,900-ல் இருந்து ரூ.35 ஆயிரமாகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு நிலுவைத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின் ஆய்வாளர் பட்டம் பெற்றவர்களுக்கு இது பொருந்தும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்