மாநிலம் முழுவதும் கலாச்சாரப் பள்ளிகள்: ஹரியாணா முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் கலாச்சார மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று ஹரியாணா முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறும்போது, ''அடுத்த ஆண்டில் மாநிலத்தில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கலாச்சார மாதிரிப் பள்ளிகள் திறக்கப்படும். இந்தப் பள்ளிகள் மூலம் மாநிலத்தின் கல்வித் தரம் அதிகரிக்கப்படும்.

ஏற்கெனவே ஹரியாணாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதே பள்ளிகள் இயங்கி வருகின்றன. மொத்தமுள்ள 22 மாவட்டங்களிலும் தலா 1 வீதம், 22 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இனி அது ஒவ்வொரு மண்டலத்துக்கும் விரிவுபடுத்தப்படும்.

வெளிப்படையாகவும் பிரச்சினைகள் இல்லாமலும் செயல்பட மின்னணு நிர்வாக முறையை அரசு திறம்படச் செயல்படுத்தி வருகிறது. ஊழல் என்பது புற்றுநோயைப் போல. வெட்ட வெட்டப் பரவும் ஒன்று.

நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளின் உதவியோடு ஊழல் முழுமையாகக் களையப்படும்'' என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்