தேசிய விளையாட்டு போட்டிகளில் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை

By செய்திப்பிரிவு

தேசிய அளவில் நடைபெற்ற கபடி, வாலிபால், சதுரங்கம், ஒட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டு போட்டிகளில் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 44பேர் லக்னோவில் நடைபெற்ற தேசியவிளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். அவர்கள் கபடி, வாலிபால், சதுரங்கம், ஓட்டப்பந்தயம் (800மீட்டர்) ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றனர். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையாளர் எஸ்.விசாகன் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

கடின உழைப்புஅவர் பேசும்போது, ‘‘மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டில் வெற்றி, தோல்வி இரண்டையும் சந்திக்கும்போது மாணவர்களுக்கு மனப்பக்குவம் வந்து விடும். முன்னேறுவதற்கான வாய்ப்புஅதிகமாகும். மாணவர்கள் படிப்பையும், விளையாட்டையும் சமமாகக் கொண்டு செல்ல வேண்டும். விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களின் வாழ்க்கையை நல்ல நிலைக்கு உயர்த்தும். விளையாட்டில் வெற்றி, தோல்வி மாறிமாறி வரும். உயர்ந்த நிலைக்கு வர விடாமுயற்சியும், கடும் உழைப்பும் அவசியம்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்விஅலுவலர் பொ.விஜயா, இந்திய குடும்ப நல சங்கக் கிளை மேலாளர் எஸ்.பிரதீபன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்