செய்திகள் சில வரிகளில்: 4 ஆண்டுகளில் எம்.பிக்கள் தங்குவதற்கு ரூ.193 கோடி செலவு

By செய்திப்பிரிவு

4 ஆண்டுகளில் எம்.பிக்கள் தங்குவதற்கு ரூ.193 கோடி செலவு

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள டெல்லி வரும் எம்.பிக்கள் தங்குவதற்காக டெல்லியில் வீடுகள் உள்ளன. இதுதொடர்பாக, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மக்களவையில் நேற்று கூறுகையில், “டெல்லியில் எம்.பி.க்களின் வீடுகள் சீரமைக்கும் பணியை மத்திய பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சீரமைப்பு பணிக்கு ரூ.193 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்றார்.

ஆன்லைன் மோசடி: மாநிலங்களுக்கு சபாநாயகர் அறிவுரை

மக்களவையில் பாஜகஎம்.பி அரவிந்த் குமார் சர்மா பேசுகையில், “பிரதமர் மோடியின் கனவு திட்டமாக டிஜிட்டல் இந்தியா உள்ளது. ஒருபக்கம் டிஜிட்டலை நோக்கி முன்னே சென்று கொண்டு இருக்கும்போது, மறுபக்கம் ஆன்லைன் பணபரிவர்த்தனை திருட்டும் அதிகமாகி வருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குக்கூட போடுவதில்லை” என்றார்.

அப்போது குறிக்கிட்ட அவைத்தலைவர் ஓம் பிர்லா,“ ஆன்லைன் பண பரிவர்த்தனை மோசடிகளை தடுப்பதற்கான செயல்
திட்டத்தை மாநில அரசுகள் வகுக்கவேண்டும்” என்றார்.

கேரள பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு அரசு உதவ ராகுல் காந்தி வலியுறுத்தல்

வயநாடு: கேரளாவில் பள்ளிகளுக்கு சரியான உள் கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். சமீபத்தில் வயநாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி இறந்தாள். இந்நிலையில், வயநாடு தொகுதிக்கு உட்பட்ட வண்டூர் பள்ளியில் புதிய அறிவியல் ஆய்வுக்கூடம் திறப்பு விழாவில் பங்கேற்ற ராகுல், ‘‘மாணவர்கள் திறந்த மனதுடனும் மற்றவர்களை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வயநாட்டில் உள்ள பள்ளிகளுக்கு உதவி செய்வேன். நாட்டிலேயே கேரளாவில்தான் பள்ளிகளின் நிலை நன்றாக உள்ளது. ஆனால் இது போதுமானதாக இல்லை. இதனால் மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளுக்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் செய்துதர வேண்டும்” என்றார்.

இந்திய புத்தகங்கள் சர்வதேச கண்காட்சி மெக்சிகோவில் தொடங்கியது

மெக்சிகோ: மெக்சிகோ நாட்டில் உள்ள குவாடலாஹாரா என்ற நகரத்தில் நடக்கும் சர்வதேச புத்தக கண்காட்சி உலக புகழ்
பெற்றதாகும். இந்நிலையில், 33-வது குவாடலாஹாரா சர்வதேச புத்தக கண்காட்சி நவம்பர் 30-ம் தேதி தொடங்கியது.

இந்த கண்காட்சியில் இந்திய மொழி புத்தகங்களும், இந்தியாவுக்கு சிறப்பு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய புத்தகங்களுக்காக தனி அரங்கு அமைக் கப்பட்டுள்ளது. இதில் 15 இந்திய பதிப்பகங்கள் மற்றும் சுமார் 50 எழுத்தாளர்களின் புத்தகங்கள் இடபெற்றுள்ளன.

இந்த புத்தக கண்காட்சியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே தொடங்கி வைத் தார். கண்காட்சியானது டிசம்பர் 7-ம் தேதி வரை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

17 mins ago

சினிமா

20 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

18 mins ago

சினிமா

36 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

30 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

44 mins ago

வலைஞர் பக்கம்

48 mins ago

சினிமா

53 mins ago

மேலும்