செய்திகள் சில வரிகளில் - பெண்கள் பாதுகாப்பு: ட்விட்டர் பிரதிநிதிகள் நிலைக்குழுவில் விளக்கம்

By செய்திப்பிரிவு

இணைய பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து ட்விட்டரின் இந்திய பிரதிநிதிகள், நாடாளுமன்ற நிலைக்குழுவில் நேற்று ஆஜராகி விளக்கமளித்தனர்.

நாடாளுமன்ற நிலைக்குழு என்பது, பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களை கொண்ட குழுவாகும். நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த குழுவானது ஆலோசனை நடத்தி, திட்டங்களை வகுத்து, அரசுக்கு பரிந்துரை செய்யும்.

பல்வேறு துறைகளுக்கென தனித்தனி நிலைக் குழுக்கள் செயல்படுகின்றன. தற்போது பெண்கள் பாதுகாப்பு குறித்த நிலைக்குழுவின் தலைவராக பாஜக எம்பி ஹீனா கவிட் உள்ளார்.

இந்நிலையில், இணையத்தில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விசாரணையில், ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிகள் நேற்று ஆஜராகி, தங்களின் திட்டம் குறித்து விளக்கமளித்தனர். அதேபோல், நிலைக்குழு முன்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரநிதிகள் இன்று ஆஜராகவுள்ளனர்.

மூத்த குடிமக்கள் பாதுகாப்புக்கு விரைவில் சட்ட திருத்தம்

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அடிப்படை தேவை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பெற்றோர், மூத்த குடிமக்கள் நலச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மசோதாவானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

இந்த மசோதா மூலம், மூத்த குடிமக்களுக்கு தங்கும் இடம், உணவு ஆகியவை அடிப்படை உரிமைகளாக உறுதிச் செய்யப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

சுற்றுச்சூழல்

11 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

6 mins ago

விளையாட்டு

27 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்