கோவை மண்டல அளவில் பள்ளி மாணவர்களுக்கு விவாத மேடை நிகழ்ச்சி

By செய்திப்பிரிவு

கோவை மண்டல அளவில் பள்ளி மாணவர்களுக்கு விவாத மேடை நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில், மண்டல அளவிலான கட்டுரை மற்றும் விவாத மேடை நிகழ்ச்சி, ராஜவீதியில் உள்ள துணிவணிகர் சங்க அரசு மேல்
நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

விவாத மேடை நிகழ்ச்சியில் திருப்பூர் நஞ்சியம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி க.கௌரி முதல் பரிசும், அன்னூர் காட்டம்பட்டி த.சா. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தி.மிருதுளாஸ்ரீ இரண்டாம் பரிசும், ஈரோடு முகாசிப்பிடாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தெ.சங்கீதாஸ்ரீ மூன்றாம் பரிசும் பெற்றனர்.

அறிவு மேம்பட என்ன தேவை கட்டுரைப் போட்டியில் ஈரோடு இக்கரை நெகமம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி மு.சம்யுக்தா முதல் பரிசும், திருப்பூர் மூலனூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி செ.சுவேதா இரண்டாம் பரிசும், ஈரோடு முகாசிப் பிடாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சி.சுவேதா மூன்றாம் பரிசும் பெற்றனர்.

கட்டுரைப் போட்டிக்கு கணுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஆர்.ஜெயலட்சுமி, செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஆர்.காளிசெல்வி, செயின்ட் மைக் கேல்ஸ் பள்ளி ஆசிரியர் ஜெ.ஜார்ஜ் ஆகியோரும், விவாத மேடை நிகழ்ச்சிக்கு மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆர்.கவியரசு, ஏ.முத்து
கவுண்டன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே.தாமோதரசாமி, துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மெபல் ஜெஸ்ஸி சந்திரா ஆகியோரும் நடுவர்களாக செயல்பட்டு, மாணவர்களை தேர்வு செய்தனர்.

இது குறித்து பள்ளி கல்வித்துறையினர் கூறியதாவது:

“ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில், வருவாய் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் 3 இடங்கள் பெற்றவர்கள், மண்டல அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

‘காலநிலை மாற்றம்-ஒரு கண்ணோட்டம்' மற்றும் ‘இணையமும், சமுதாயமும்-ஒரு கண்ணோட்டம்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், அறிவு மேம்பாட்டுக்கு வழிகாட்டுவதில் சிறந்தது தாய்மொழி கல்வியா? ஆங்கில வழிக்கல்வியா? என்ற தலைப்பில் விவாத மேடை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் கே.கண்ணன் செய்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

12 mins ago

சுற்றுச்சூழல்

22 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

17 mins ago

விளையாட்டு

38 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்