உலக அளவில் முதலிடம்; 1.75 கோடி இந்தியர்கள் அயல்நாட்டுக்கு புலம்பெயர்வு: ஆய்வறிக்கையில் தகவல்

By செய்திப்பிரிவு

பல்வேறு அயல்நாடுகளுக்கு இந்தியாவை சேர்ந்த 1.75 கோடி பேர் புலம்பெயர்ந்துள்ளதாகவும், உலக அளவில் இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகிஉள்ளது.

சர்வதேச புலம்பெயர்வோர் அமைப்பு (ஐஒஎம்) உலகளாவிய புலம்பெயர்வு அறிக்கை-2020ஐ கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டது. அதில்,உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து சுமார் 27 கோடி(270 மில்லியன்) மக்கள் வேறு நாடுகளுக்கு புலம்
பெயர்ந்துள்ளனர். குறிப்பாக 5 கோடி மக்கள்அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, ஐஒஎம் அமைப்பு 2 ஆண்டுகளுக்கு முன்பாக தனது புலம்பெயர்வோர் அறிக்கையை வெளியிட்டது. அதில், குறிப்பிடப்பட்ட சதவீதத்தை விட உலக மக்கள் தொகையில் 0.1 சதவீதம் புலம்பெயர்வோர் எண்ணிக்கை 2018-ல் அதிகரித்துள்ளது.
தற்போது, உலக மக்கள் தொகையில் 3.5 மக்கள் தங்கள் தாய் நாட்டைவிட்டு வேறு நாட்டுக்கு புலம்பெயர்கிறார்கள். அதில், 52 சதவீதம் ஆண்கள் (3ல் 2 ஆண்கள்) பணி நிமித்தமாகவும், மேற் படிப்புக்காகவும் புலம்பெயர்கிறார்கள்.

புலம்பெயர்வில் இந்தியர்களே முதல் இடத்தில் உள்ளனர். கிட்டதட்ட 1.75 கோடி இந்தியர்கள் அயல் நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

அடுத்தப்படியாக மெக்சிகோ(1.18 கோடி), சீனா (1.07 கோடி) மக்கள் அயல் நாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள். புலம்பெயர்வு மேற்கொள்ளும் மக்கள்தொகையில் பாதிக்கும் மேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்குதான் செல்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் 5.7 கோடி வெளிநாட்டு மக்கள் உள்ளனர்.

பல்வேறு அயல்நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் சொந்த நாட்டில் வசிக்கும் தங்களின் பெற்றோர், உறவினர்களுக்கு சுமார் ரூ.68 ஆயிரத்து 900 கோடியை 2018-ம் ஆண்டில் மட்டும் அனுப்பியுள்ளனர்.

அதிலும், ரூ.7 ஆயிரத்து 890 கோடி இந்தியாவுக்கு அனுப்பி, இந்தியர்களே முதலிடம் உள்ளனர். அடுத்தபடியாக, சீனா (ரூ. 6 ஆயிரத்து 740 கோடி ), மெக்சிகோ (ரூ.3 ஆயிரத்து 570 கோடி) உள்ளது.

புலம்பெயர்ந்தோர் அதிகம் வசிக்கும் அமெரிக்காவில் இருந்து ரூ.6 ஆயிரத்து 800 கோடி பிறநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு, முதலிடத்தில் உள்ளது.

அடுத்தபடியாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 440 கோடியும், சவுதி அரேபியாவில் இருந்து ரூ.3 ஆயிரத்து 610 கோடியும் பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்றால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று கருதிதான் அதிக மக்கள் புலம்பெயர்வதாகவும், உள்நாட்டு போர் காரணங்களை விட, இது அதிகமாக இருக்கிறது என்றும் அறிக்கை கூறுகிறது. உள்நாட்டு போரால், அதிகப்படியாக சிரியாவில் இருந்து 61 லட்சம் பேரும், கொலம்பியாவில் இருந்து 58 லட்சம் பேரும் புலம்பெயர்ந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

விளையாட்டு

7 mins ago

இணைப்பிதழ்கள்

33 mins ago

தமிழகம்

43 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்