அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு: அமைச்சர் செங்கோட்டையன்

By செய்திப்பிரிவு

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ''வரும் பிப்ரவரி மாதத்துக்குள் அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும். இதனால் ஆசிரியர் பற்றாக்குறை என்பதே எதிர்காலத்தில் இருக்காது.

ஆசிரியர் தேர்வு மையத்தின் மூலம் நடைபெறும் தேர்வுகள் வழக்காடு மன்றத்துக்குச் செல்கின்றன. இதனால் 6 மாதம், ஓராண்டு எனத் தாமதம் ஏற்படுகிறது. இனி அந்த நிலை ஏற்படாத வகையில் டிஆர்பிக்கென தனி ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார்.

கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள, முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு வழங்க, புதிய புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

தமிழகம்

10 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

44 mins ago

விளையாட்டு

36 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்