நிகழ்வுகள்: உலக மண் நாள் - டிசம்பர் 5

By செய்திப்பிரிவு

சர்வதேச குறைபாடுடையோர் நாள்- டிசம்பர் 3

உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் குறைபாடுகளை உடைய மனிதர்களின் நலன்களையும் உரிமைகளையும் சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து மட்டங்களிலும் மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் நாள் சர்வதேச குறைபாடுடையோர் நாளாகக் (International Day for Disabled Persons) கடைப்பிடிக்கப்படுகிறது. 1992-ல் ஐ.நா. சபை இதனைத் தீர்மானித்தது. 2019-ம் ஆண்டுக்கான கருப்பொருள், குறைபாடுடைய மனிதர்களின்பங்கேற்பையும் அவர்கள் தலைமைப்பொறுப்புக்கு வருவதையும் அதிகரிப்பதாகும். அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரநிகழ்ச்சிகளில் அவர்களும் பங்கேற்கக் கூடிய ஏதுவான சூழல் அமைய வேண்டும் என்பதும் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள்- டிசம்பர் 4

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்களில் ஒருவரான ஆர்.வெங்கட்ராமன் 1910டிசம்பர் 4 அன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜமடம் கிராமத்தில் பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்பு சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். 1952-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்குச் சென்றார். காங்கிரஸ் அரசுகளில் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்தார். 1984-ல் குடியரசுத் துணைத் தலைவராகவும் 1987-ல் இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலக மண் நாள்- டிசம்பர் 5

ஒரு கால்பந்து மைதான அளவு மண் ஒவ்வொரு 5 நொடிகளுக்கு அரிப்பு ஏற்பட்டு அழிந்து போகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். மண் அரிப்பினால் மண்ணின் தரம் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். மண்ணை அரிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5-ம் நாள் உலக மண் நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான மண் வளத்தை மேம்படுத்துவது, நன்மை பயக்கும் வகையில் மேலாண்மை செய்வது ஆகியவற்றுக்காக இந்தநாளை ஐநா அர்ப்பணித்துள்ளது. மண் அறிவியலுக்கான சர்வதேச சங்கம் இப்படிஒரு நாள் கடைபிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை 2002-ல் ஐநாவுக்கு வலியுறுத்தியது. ஐநாவின் துணை அமைப்பான
உணவு மற்றும் விவசாய நிறுவனமும் (FAO)உலக மண் நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தது. உலகமண் நாள் அனுசரிக்கப்பட வேண்டும் என்றகோரிக்கையை முன்னெடுத்த முக்கியமானவர்களில் ஒருவரான தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜின் பிறந்த நாள் டிசம்பர் 5. அவரை கெளரவிக்கும் விதமாகஇந்த நாள் உலக மண் நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அம்பேத்கர் நினைவு நாள்- டிசம்பர் 6

இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்தகுழுவின் தலைவராகப் பணியாற்றியவர் சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். இந்திய அரசியல் சாசனத்தின் தந்தைஎன்றும் அறியப்படுபவர். சட்ட மேதையாகவும் பொருளாதார நிபுணராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் அரசியல் தலைவராகவும் திகழ்ந்தவர். பட்டியல் சாதியில் பிறக்க நேர்ந்ததால் சிறுவயது முதல்
தீண்டாமைக் கொடுமையை எதிர்கொண்டார். தடைகளைக் கடந்து அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டமும் 1927-ல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். பல இளநிலை, ,முதுநிலை பட்டங்களையும் நான்கு முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார். இந்தியாவில் தீண்டாமைக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். கல்வியின் மூலமாகவே சாதி ஒடுக்குமுறையிலிருந்து மீள முடியும் என்பதை வலியுறுத்தினார். 1926-ல் இந்தியக் குடியரசுக் கட்சியைதொடங்கினார். பம்பாய் லெஜிஸ்ட்லேடிவ்கவுன்சிலின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் சாசன வடிவமைப்புக் குழுவின் தலைவராகச் செயல்
பட்டார். 1956 டிசம்பர் 6 அன்று புது டெல்லியில் மரணமடைந்தார்.

- தொகுப்பு: கோபால்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்