செய்திகள் சில வரிகளில்: ஓட்டல் மேலாண்மை- தொலைதூரக் கல்வியில் படிக்க முடியாது 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஓட்டல் மேலாண்மை மற்றும் ரியல் எஸ்டேட் துறை படிப்புகளில் தொலைதூர கல்விக்கு அனுமதி கிடையாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பல்வேறு திட்டக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப ஓட்டல் மேலாண்மை, சமையல் கல்வி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கு 2019-20 கல்வி ஆண்டில் இருந்து தொலைதூரக் கல்வி அங்கீகரிப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், பொறியியல், கட்டிடக் கலை ஆகிய படிப்புகளுக்கு தொலைத்தூரக் கல்வி அனுமதி இல்லை என்று யுஜிசி கடந்த 2017-ம்
ஆண்டு அறிவித்தது. பின்னர் வேளாண்மை படிப்பையும் தொலைதூரக் கல்வியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

செல்போன் வாங்க முக அங்கீகாரம் தேவை: சீன அரசு அறிவிப்பு

பெய்ஜிங்

சைபர்ஸ்பேஸ் கட்டுப்பாடுகளை சீனா அரசு பலமாக கட்டமைத்து வருகிறது. இதனால், இணைய சேவை உள்ளிட்டவற்றுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், கடைகள் மற்றும் ஆன்லைனில் செல்போன் வாங்கும்போது, வாங்குவோரின் முகங்களை, விற்பனையாளர்கள் ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்ட அறிக்கையில், “ஆன்லைனில் குடிமக்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பது பொருட்டு, பயனாளிகளின் உண்மையான பெயர் பதிவைச் செயல்படுத்துவதற்கான விதிகள் வகுக்கப்படும்” என்று கூறியிருந்தது.

ஏற்கெனவே, தொலைபேசி எண்ணுடன், அடையாள அட்டை உள்ளிட்ட தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது, செல்போன் வாங்கும் போதும் முக அடையாளம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

விளையாட்டு

59 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்