ஐ.நா. எச்சரித்த நிலையில் இந்திய கடல் மட்டம் 8.5 செ.மீ. உயர்வு: மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

இந்திய கடலோரப் பகுதிகளின் கடல்நீர் மட்டம் 8.5 செ.மீ உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறையின் இணை அமைச்சர் மாநிலங்களவையில் தகவல் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் “பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீா் மட்டம் உயர்ந்து, பல்வேறு நகரங்கள் மூழ்கும் ஆபத்து உள்ளதா” என்று கேள்வி எழுப்பட்டது. இதற்கு மத்தியசுற்றுச்சூழல் துறை இணை அமைச்சா் பாபுல் சுப்ரியோ எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:காலநிலை மாற்றம் காரணமாகதான் கடல் மட்டத்தின் அளவு அதிகரிப்பு என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், இந்திய கடலோரப் பகுதிகளில் ஆண்டுக்கு சராசரியாக 1.70 மி.மீ.

அளவுக்குக் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் 8.5 செ.மீ. அளவுக்கு உயர்ந்துள்ளது.

மேலும், செயற்கைக்கோள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, வட இந்தியப்பெருங்கடலில் (என்ஐஓ) கடந்த 10 ஆண்டில் (2003-2013), ஆண்டுக்கு 6.1 மி.மீ. என்ற விகிதத்தில் கடல் மட்ட ம் உயர்ந்துள்ளது. கடல்நீர் மட்டம் உயர்வு காரணமாக ஏற்படும் சுனாமி, புயல், கடலோர வெள்ளம் போன்ற சமயங்களில் தாழ்வான பகுதிகள் அதிகம் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது. உயர்ந்து வரும் கடல் மட்டத்தினால், கடலோரப் பகுதியின் சராசரி கடல் மட்டத்திற்கு மேலே உள்ள உயரத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஆனால், கடலோர பகுதி நிலத்தின் உயரத்தின் வீழ்ச்சி அல்லது தோற்றம் குறித்த நீண்ட கால தரவு எதுவும் கிடைக்கவில்லை. இதனால், கடல் மட்டத்தின் அதிகரிப்பு விகித்தை உறுதியாகக் கூற முடியாது.

இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

முன்னதாக, ஐ.நா.வின் காலநிலை மாற்றம் தொடர்பான அரசு குழு (ஐபிசிசி), கடல் மட்டம் ஒரு மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் இதனால், மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நகரங்கள் 2100-ம்ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் என்றும்எச்சரித்த நிலையில், அமைச்சரின் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

வணிகம்

18 mins ago

இந்தியா

20 mins ago

சினிமா

26 mins ago

ஓடிடி களம்

58 mins ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்