செய்திகள் சில வரிகளில்: முதல் தொழிட்நுட்ப ஜவுளி ‘ஹேக்கத்தான்’ மும்பையில் நாளை நடக்கிறது

By செய்திப்பிரிவு

55 புதிய பசுமை நிலக்கரி சுரங்கம் அமைக்க திட்டம்

புதுடெல்லி

நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் நேற்று கூறியதாவது:

நிலக்கரி இந்தியா நிறுவனத்தின் திட்டங்கள் போர்டல் அடிப்படையில் கண்காணிக்கப்படுகின்றன.

தற்போது உள்ள 193 பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து ஆண்டுக்கு 310 மில்லியன் டன் நிலக்கரி கிடைக்கிறது. 55 புதிய பசுமை நிலக்கரி திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம். இதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் 92 மில்லியன் டன் நிலக்கரி கூடுதலாக கிடைக்கும்.

காஷ்மீரில் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் திறப்பு

புதுடெல்லி

மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் நேற்று கூறியதாவது:

காஷ்மீரில் தற்போது அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு, மாணவர்களின் வருகைப்பதிவு 98% உள்ளது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடந்ததேர்வில் 98% மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தொடக்கத்தில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்
பட்டு, மாணவர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. மேலும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் என அனைத்து மருத்துவச் சேவைகளும் முழுமையாக செயல்படுகின்றன.-பிடிஐ

முதல் தொழிட்நுட்ப ஜவுளி ‘ஹேக்கத்தான்’ மும்பையில் நாளை நடக்கிறது

மும்பை: இந்தியாவின் முதல் தொழில்நுட்ப ஜவுளி ‘ஹேக்கத்தான்’ நிகழ்ச்சி மும்பையில் நாளை நடக்கவுள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சியை நடத்தும் மெஸ்ஸி பிராங்பேர்ட்இந்தியா அமைப்பு வெளியிட்ட அறிக்கை: உற்பத்தி நிறுவனங்களின் சிறப்பு இழைகள், நூல்கள், ஜவுளி, துணிகள், பிராண்டுகள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும். சிறு, நடுத்தர தொழில்முனைவோர், சுற்றுச்சூழல் அமைப்பு ஆகிய தரப்புகளின் முன்னேற்றத்துக்கு இந்நிகழ்ச்சி பயன்படும்.

இந்திய ஜவுளித்துறையின் புதுமைகளை எடுத்துக்காட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்