ஐரோப்பிய கால்பந்து போட்டி: டென்மார்க், சுவிட்சர்லாந்து தகுதி

By செய்திப்பிரிவு

ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஐரோப்பிய கால்பந்து போட்டி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இதில் அயர்லாந்து மற்றும் டென்மார்க் அணிகள் டப்ளின் நகரில் மோதின. இப்போட்டி 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருந்த டென்மார்க் அணி, ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.

சுவிட்சர்லாந்து மற்றும் கிப்ரால்டர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 6-1 என்ற கோல்கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதன்மூலம் அந்த அணியும் ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது. ஸ்வீடன் மற்றும் ஃபரோ ஐலண்ட் அணிகளுக்கு இடையே நடந்த மற்றொரு போட்டியில் ஸ்வீடன் அணி 3-0 என்ற கோல்கணக்கில் வென்றது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்