மேற்கு வங்க 8-ம் வகுப்பு பாடத்தில் பாம்புகள் பற்றிய தகவல்கள் சேர்ப்பு

By செய்திப்பிரிவு

மேற்கு வங்க மாநிலத்தின் 8-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் பாம்புகள் பற்றிய தகவல்களை பாடமாக இணைக்க மாநில கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் நூற்றுக்கும் அதிகமான பாம்பு வகைகள் உள்ளன. இதில் விஷமுள்ள பாம்புகள் கடித்து,ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். மேலும், இந்தியாவில் பாம்பு குறித்து பலதவறான கருத்துக்கள் மக்களிடம் நிலவுகின்றன. இந்நிலையில், பாம்பின் பல்வேறு வகைகள் குறித்தும்,அதை நாம் பார்த்தால் என்ன செய்ய வேண்டும் என்றும், பல்லுயிர் பெருக்கத்தில் பாம்பின் பங்கு என்ன என்பதையும் மாணவர்களுக்கு கற்பிக்கவும் பாம்பு பற்றி தகவல்கள், வாழ்க்கை அறிவியல் பாடத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று மேற்கு வங்க கல்வித் துறையின் பாடத் திட்டம் வகுக்கும் குழுவின் தலைவர் அபிக் மஜும்தர் கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “ புதிதாக இணைக்கப்படும் பாடத்தில், விஷமுள்ள பாம்புகள் மற்றும் விஷமற்ற பாம்புகள்,அவற்றின் லத்தீன் பெயர்கள் மற்றும் பொதுவான பெயர்கள் இடம்பெறவுள்ளன. அதேபோல், பாம்பைஅருகில் பார்த்தால் மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதும் சேர்க்கப்படும். இதன்மூலம், பாம்புகள் பற்றிய தவறானகருத்துகள் விலகி விழிப்புணர்வு ஏற்படும். ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதுகுறித்து மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியத்தின் தலைவர் கல்யான்மோய் கங்குலிகூறுகையில், “பள்ளி மாணவர்களுக்கு பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்த இன்னும் பல பாடத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்