பாகிஸ்தானிலும் காற்று மாசு: பள்ளிகள் மூடல்

By செய்திப்பிரிவு

லாகூர்

பாகிஸ்தானின் லாகூரில் அதிக காற்று மாசு ஏற்பட்டதால், அங்குள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரமான லாகூரில் 1.1 கோடி மக்கள் வசிக்கின்றனர். மாகாணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் தங்கள் பயிர்களின் மிச்சங்களை எரிப்பதால், கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

இதனால் லாகூர் முழுவதும் அடர்த்தியான புகை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தானியக் களஞ்சியமாக பஞ்சாப் மாகாணம் கருதப்படுகிறது. இந்நிலையில் பயிர்கள் எரிப்பு, கடுமையாக போக்குவரத்து நெரிசல், தொடர்ச்சியாக மரங்களை வெட்டுவது ஆகியவை காற்று மாசுபாட்டுக்கான முக்கியக் காரணிகளாக அமைந்துள்ளன.

இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் லாகூரில் காற்று தரக் குறியீடு 114 ஆக இருந்தது. காற்று தரக் குறியீட்டின்படி, 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் நல்லது, 51-100 புள்ளிகள் வரை இருந்தால் மனநிறைவு, 101-200வரை புள்ளிகள் இருந்தால் மிதமானது, 201-300 புள்ளிகள் இருந்தால் மோசம், 301-400 வரை இருந்தால் மிக மோசம், 401-500 புள்ளிகள் இருந்தால் மிகத்தீவிரம், 500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் மிகமிகத்தீவிரம் அல்லது நெருக்கடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த நவம்பர் 1-ம் தேதி, காற்று மாசு 542 என்ற அளவில் மிக மோசமான நிலையைத் தொட்டு, நெருக்கடி நிலையை எட்டியது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டதை அடுத்து, பள்ளிகளுக்கு 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏபி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

35 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

40 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்