பள்ளி, கல்லூரிகளில் காஷ்மீர் பண்டிட்டுகளின் குழந்தைகளுக்கு சிறப்புச் சலுகை: மத்திய அரசு 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

பள்ளி, கல்லூரிகளில் காஷ்மீர் பண்டிட்டுகளின் குழந்தைகளுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ''நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்த பண்டிட்டுகள் மற்றும் காஷ்மீரிலேயே வாழும் இந்துக்கள் ஆகியோருக்கு பள்ளி, கல்லூரி சேர்க்கையில் சிறப்புச் சலுகை அளிக்கப்பட வேண்டும். வரும் 2020-21 ஆம் கல்வியாண்டில் இருந்து இது அமல்படுத்தப்பட வேண்டும்.

இதன்படி, குறைந்தபட்ச தகுதியின் அடிப்படையில், கட்-ஆஃப் சதவீதத்தில் அதிகபட்சமாக 10% வரை தளர்வு அளிக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்களில் தகுதி ஒதுக்கீட்டின் அடிப்படையில், குறைந்தபட்சம் ஓர் இடமாவது ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள, காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்த மக்களுக்கு குடியேற்றச் சான்றிதழ் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் பண்டிட்டுகள் மற்றும் இந்து குடும்பங்கள் இருப்பிடச் சான்றிதழை அளிக்க வேண்டியது அவசியம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சகத்தின் அறிக்கை, பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர், ஏஐசிடிஐ தலைவர், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

சினிமா

29 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

35 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்