ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இன்று வருகிறார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், தனது 12 அமைச்சர்களுடன் இன்று மாலை இந்தியா வருகிறார்.

இதுகுறித்து ஜெர்மன் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் கூறுகையில், “ஜெர்மனி - இந்தியா இடையே மிக நீண்டகால உறவு உள்ளது. இந்நிலையில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் 31-ம் தேதி (இன்று) இந்தியா வருகிறார். அவருடன் 12 முக்கிய துறை அமைச்சர்களும் வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு, நிலையான வளர்ச்சி, நகர்ப்புற இயக்கம், வேளாண்மை மற்றும் கால்பந்து தொடர்பாக ஏஞ்சலா மெர்க்கல் - மோடி சந்திப்பு அமையும்.

அதேபோல், காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் ஏஞ்சலா - மோடி சந்திப்பின் போது பேசப்பட உள்ளது’’ என்றார். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவின் இந்திய பயணத்தின் போது 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

45 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

10 hours ago

ஆன்மிகம்

10 hours ago

மேலும்