பேராசிரியர்கள் பெயரில் முறைகேடு; பொறியியல் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை: தொழில்நுட்ப கல்விக் குழுமம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி:

‘‘பேராசிரியர் பணி விவரங்களில் முறைகேடு செய்தால், பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’’ என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை சமீபகாலமாக குறைந்து வருகிறது.

இதன் காரணமாக, பேராசிரியா்கள் பணி நீக்கம் செய்தல், ஊதியம் குறைத்தல் போன்ற செயல்களில் கல்லூரி நிர்வாகங்கள் ஈடு
படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதேபோல், மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிகள் அனுமதி பெறும் போது ஒரே பேராசிரியரை பல்வேறு கல்லூரிகளில் பணி புரிவது போல முறைகேடாக கணக்கு காட்டுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், ஏஐசிடிஇ உறுப்பினர் - செயலர் ராஜீவ் குமார் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

சில கல்லூரி நிர்வாகங்கள் மாணவா் சோ்க்கைக்காக ஒப்புதலை நீட்டிப்பு செய்ய ஒரே பேராசிரியரை அவா்களின் குழுமத்தில் உள்ள பல கல்லூரிகளுக்கு கணக்குக் காட்டி அனுமதி பெறுவதாக புகார்கள் வந்துள்ளன. இது ஏஐசிடிஇ வழிகாட்டுதலை மீறும் செயலாகும். இதுபோன்ற செயல்களால், தொழில் நுட்பக் கல்வியின் தரம் பாதிக்கும்.

இதுதொடா்பாக பெறப்படும் புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்தப்படும். அதில் கல்லூரிகள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் சோ்க்கை அனுமதி ரத்து, அங்கீகாரம் ரத்து உட்பட கடும் நவடிக்கைகள் எடுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்