5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: மேற்கு வங்கத்தில் மீண்டும் அறிமுகம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா

5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைமுறை மேற்கு வங்கத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கட்டாயத் தேர்ச்சி முறையை நீக்க முடிவுசெய்துள்ள மேற்கு வங்க அரசு, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைமுறையை மீண்டும் கொண்டு வர உள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, ''அடுத்த கல்வியாண்டில் இருந்து பொதுத் தேர்வு அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மீண்டும் தேர்ச்சி - தோல்வி முறை கொண்டு வரப்படும்.

6 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்குச் செல்ல அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்'' என்று தெரிவித்தார்.

மேற்கு வங்க அரசு, 2010-ம் ஆண்டு கட்டாயத் தேர்ச்சி முறையைக் கொண்டு வந்தது. அப்போது, இந்த முறை மோசமான தரம் கொண்ட மாணவர்களை உருவாக்கிவிடும் என்று ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்