அபெக்ஸ் பல்கலையுடன் யுனானி நிறுவனம் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி:

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அபெக்ஸ் நிபுணத்துவ பல்கலை. (ஏபியூ) மற்றும் தேசிய யுனானிமருத்துவ நிறுவனம் (என்ஐயூஎம்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகிவுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம், யுனானி மருத்துவ கல்வியில், சிறந்த கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஏபியூ இணைவேந்தர்கன்வால் சிங் கூறுகையில், “முறையான ஆராய்ச்சியை மேற்கொள்வது, கருத்தரங்குகள், மாநாடுகள், இணைய வழி கருத்தரங்கு, தர்க்கரீதியான அணுகுமுறை பட்டறைகள் ஆகியவற்றை மையமாக கொண்டே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இது ஆராய்ச்சி அறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான திறன்கள் / திட்டங்களின் பரிமாற்றம் செய்ய உதவும்.

ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளுபவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும் தேவையான கருவி களை வழங்க தேவையான வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

என்ஐயூஎம் பேராசிரியர் அப்துல்வாதுட் கூறுகையில், “இந்த திட்டமானது, சமூக, பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்காக சுகாதார முகாம்களை அமைக்கவும் வழிவகை செய்யும். முழு அர்ப்பணிப்போடு ஆராய்ச்சி மேற்கொள்ளுவர்களுக்கு, தேவையானபணியாளர்களுக்கு பயிற்சி, கருத்தரங்குகள், நடைமுறை பயிற்சிக்கான வசதி திட்டமிடல் போன்றவையும் இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது’’ என்றார்.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

மேலும்