வாட்ஸ் அப்பில் வலம் வரும்  நூலகம்: அரசு பள்ளி ஆசிரியரின் அசத்தல் பணி

By செய்திப்பிரிவு

க.ரமேஷ்

கடலூர்

கடலூர் அருகே உள்ளது பூண்டியாங்குப்பம் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் விஜயகுமார், வாசிப்பில் நேசம் உடையவர். பாடப் புத்தகம் தாண்டி பல்வேறு நல்ல நூல்களோடு நெருக்கமாய் இயங்கி வரும் இவர், தன்னைப் போல பிறரும் பயனுள்ள விஷயங்களை படித்துப் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில், சில வருடங்களுக்கு முன் வாட்ஸ்அப்பில் ‘விஜியின் நூலகம்' என்ற ஒரு குழுவைத் தொடங்கினார்.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, தொடர்ந்து ‘புத்தகக் களஞ்சியம்', 'மருத்துவம் அறிவோம்', ‘சமையல்', ‘வீட்டுக் குறிப்பு', ‘விரைவுச் செய்திகள்', ‘காமெடி கலக்கல்', ‘பொழுது போக்கு', ‘இயற்கை விவசாயம்', ‘10,ம் வகுப்பு', ‘பிளஸ்1, பிளஸ்2 மாணவர் தளம்', ‘திருமண தகவல், ‘ஜோதிடம் அறிவோம், ‘விஜியின் குழு இணைவு தளம்', ‘ஆசிரியர்களுக்கான குழு', ‘தலைமை ஆசிரியர்கள் குழு' என்று பல தரப்பினர் பயன் பெறும் வகையில் பல வாட்ஸ்அப் குழுக்களைத் தொடங்கி 6 கைப்பேசிகள் மூலம் இயக்கி வருகிறார்.

உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த வாட்ஸ் அப் குழுக்களில் ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். எந்த எதிர்பார்ப்பும் இன்றி இதனை இந்தப் பள்ளித் தலைமையாசிரியர் சேவையாகவே செய்து வருகிறார். இதுகுறித்து விஜயகுமார் கூறியதாவது: தெரியாத தகவல்களை பலருக்குத் தெரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நூலகம் உள்ளிட்ட பல்வேறு குழுக்களை வாட்ஸ் அப்பில் தொடங்கி நடத்தி வருகிறேன். இந்த வாட்ஸ்அப் குழுக்கள் மேம்பட பல்வேறு நண்பர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்களை 'குழு அட்மின்' ஆக்கினேன்.

குறிப்பாக கோபிச்செட்டிபாளையம் அன்பழகன், பெங்களூரு பெருமாள், சென்னை வாசு கண்ணன், கன்னியாகுமரி சுந்தர், திருச்சி சந்திரகுமார், மதுரை ராஜேந்திரன், செந்தில்ராஜா உள்ளிட்ட பலர் 'அட்மின்' ஆக என்னுடன் கைகோர்த்து ஆர்வமுடன் இயங்கி வருகின்றனர்.

ஒரு வாட்ஸ்அப் குழுவில் 256 பேருக்கு மேல் இருக்க முடியாது என்பதால் நூலகம் 1, நூலகம் 2, நூலகம் 3 என்று குழுக்கள் அமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இது போல அனைத்து குழுக்களும் 1, 2, 3, 4,5 என பல குழுக்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 350க்கும் மேற்பட்ட குழுக்கள் ஆக்கப்பூர்வமாக இயங்கி, பயனுள்ள தகவல்களை அளிப்பதை பெருமையாக கருதுகிறோம்.
எங்கள் குழுக்களில் உலகம் முழுவதும் ஏராளமானோர் உறுப்பினர்களாக இருந்து பயனடைகின்றனர். நாள்தோறும் நடப்பு பணிகளின் அழுத்தம் இருந்தாலும், அதற்கு மத்தியிலும் இதை எடுத்துச் செய்து வருகிறோம். பயனடைந்தவர்கள் பாராட்டி சின்னதாக ஒரு ‘ஸ்மைலி'யை பதிவிடும்போது, இன்னல்கள் கூட இன்பமானதாக மாறி விடுகிறது'' என்றார்.

இந்தக் குழுவில் இணைய விரும்புவோர், 95973 42995 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்