விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்

விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவிகள் திண்டுக்கலில் பேரணி நடத்தினர்.

தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் ஒலி, காற்று மாசு ஆகியவற்றைக் குறைக்கும் வகையிலும், விபத்தில்லாத தீபாவளியைக் கொண்டாடவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்தொடங்கிய இந்த பேரணி, பேருந்துநிலையம் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தது.

பேரணியில் சென்ற மாணவ, மாணவிகள் உச்ச நீதிமன்ற ஆணைப்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். திறந்த வெளிகள், பொது இடங்களில் பட்டாசுகளை வெடிக்கலாம். குடிசைகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள பகுதிகளில் ராக்கெட் உள்ளிட்ட வானவெடிகளை வெடிக்கக் கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

59 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்