எவரெஸ்டில் குவியும் குப்பைகளில் அழகிய கைவினைப் பொருட்கள்

By செய்திப்பிரிவு

காத்மாண்டு

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்கள் அங்கு விட்டு வரும் தண்ணீர் பாட்டில்கள் போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்து அழகிய கைவினைப் பொருட்களை நேபாள நாட்டினர் செய்து வருகின்றனர்.

எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றம் செய்து சாதனை படைக்க பலர் ஆர்வமாக உள்ளனர். அங்கு செல்லும் பலர், தண்ணீர் பாட்டில்கள் உட்பட பிளாஸ்டிக் பொருட்களை போட்டுவிட்டு வந்து விடுகின்றனர். இதனால் எவரெஸ்ட்டில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, நேபாள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எவரெஸ்டில் சேரும் குப்பைகளை சேகரித்து கீழே கொண்டு வருகின்றனர். அவற்றை மறுசுழற்சி செய்து நேபாள மக்கள் புதிய பொருட்களை உருவாக்குகின்றனர். உடைந்த பானையில் இருந்து விளக்கு போன்ற பல பொருட்களை மலையில் செய்கின்றனர்.

காலி குடுவைகள், காஸ் சிலிண்டர்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக கைவினைபொருட்களை செய்து
பயன்படுத்துகின்றனர். காத்மாண்டுவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்குக் கூட மறுசுழற்சி செய்யப்
பட்ட கப்பில்தான் தண்ணீர் பரிமாறுகின்றனர்.

-ஏஎஃப்பி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 min ago

தமிழகம்

9 mins ago

இந்தியா

12 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

43 mins ago

ஓடிடி களம்

57 mins ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்