உலகிலேயே முதன்முறை: கண்களைக் கட்டிக் கொண்டு 25 விதமான செயல்களைச் செய்து பள்ளி மாணவி சாதனை

By இ.மணிகண்டன்

விருதுநகர்

உலகிலேயே முதன்முறையாக பள்ளி மாணவி ஒருவர் கண்களைக் கட்டிக் கொண்டு 25 விதமான செயல்களைச் செய்து சாதனை படைத்துள்ளார்.

விருதுநகர் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவி ஹர்ஷ நிவேதா(12). யோகக் கலையை சிறுவயது முதலே சிறப்பாகச் செய்து வருபவர்.

இந்நிலையில் நிவேதா இன்று (அக்.23) உலக சாதனையாக தன்னுடைய இரு கண்களையும் கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு புத்தகம் வாசித்தல், அப்துல் கலாம் படம் வரைதல், பல்வேறு வடிவங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள க்யூப்பை (Quebec) சரிசெய்தல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட 25 வகையான செயல்களை 1 மணிநேரத்தில் செய்து 'யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'ஃப்யூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இதற்கு முன் சீனாவைச் சேர்ந்த சிறுவன், கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு கியூப்பை சரி செய்ததே உலக சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில் முதல் முறையாக 25 செயல்களைச் செய்து சாதனை படைத்ததற்காக ஹர்ஷ நிவேதாவுக்கு, 'டேலண்ட் ஹிட் வேர்ல்டு ரெக்கார்டு' விருது வழங்கப்பட்டது.

கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இல்லாத பல சாதனைகளைச் செய்த மாணவி ஹர்ஷ நிவேதா, இதற்கு முன்பு யோகாசனத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

சினிமா

35 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்