மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்தில் விதிவிலக்கு: கேஜ்ரிவால் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

சீருடையுடன் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து விதியில் விலக்கு அளிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் வாகனங்களை இயக்க ஒற்றை- இரட்டை பதிவு எண் என்ற திட்டம் உள்ளது. அதில் ஏற்கெனவே பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேஜ்ரிவால் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஒற்றை - இரட்டை இலக்க எண் திட்டத்தில் இருந்து சீருடையுடன் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் பள்ளி நேரத்தில் மட்டுமே அவற்றுக்கு விலக்கு அளிக்கப்படும்'' என்றார்.

இதே திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனங்களுக்கு ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.4,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் தனக்கோ, தனது அமைச்சரவைக்கோ விதிவிலக்கு கிடையாது என்று கேஜ்ரிவால் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்