மெய்நிகர் முறையில் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: சிபிஎஸ்இ அறிமுகம்

By செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் மெய்நிகர் முறையில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. இம்முறை பள்ளிகளைத் தரம் உயர்த்தி அங்கீகாரம் பெற விரும்பும் பள்ளிகளுக்கு மட்டுமானதாகும்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, சிபிஎஸ்இ பள்ளிகளில் உயர் வகுப்புகளில் அதிக மாணவர்கள் எண்ணிக்கை காரணமாகப் பள்ளிகளை உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த சிபிஎஸ்இ-ன் அங்கீகாரம் தேவை.

இந்நிலையில் சிபிஎஸ்இ 2021-22 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தி அங்கீகாரம் பெற விரும்பும் பள்ளிகளை மெய்நிகர் முறையில் ஆய்வு செய்யும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

வழக்கமாக ஆய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும். ஏற்கெனவே இந்தப் பணியை சில பள்ளிகளில் நேரடியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளுக்கு இந்த ஒருமுறை மட்டும் மெய்நிகர் முறையில் ஆய்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 10 நாட்களுக்குள் இந்த ஆய்வை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 014- 22527183, 22467774, 22549627 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது cbsevirtualinspection@gmail.com என்ற இ-மெயில் முகவரியை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

19 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்