‘மெட்டி ஒலி’ தொடரால் பிரபலமான - சின்னத்திரை நடிகை உமா மகேஸ்வரி காலமானார் :

By செய்திப்பிரிவு

பிரபல சின்னத்திரை நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 40.

சன் டிவியில் கடந்த 2002 முதல் 2005 வரை ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்ற தொடர் ‘மெட்டி ஒலி’. திருமுருகன் இயக்கிய இத்தொடரில் ‘விஜி’ என்ற பிரதான கதாபாத்திரத்தில் நடித்தவர் உமா மகேஸ்வரி.

இத்தொடரின் வெற்றிக்கு பிறகு, ‘வெற்றிக்கொடி கட்டு’,‘உன்னை நினைத்து’, ‘அல்லிஅர்ஜுனா’ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். ‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவரது கணவர் முருகன், கால்நடை மருத்துவராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு, தொடர்களில் நடிக்காமல், குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை கிடையாது.

சில மாதங்களுக்கு முன்பு உமா மகேஸ்வரி, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். அதற்கு சிகிச்சை எடுத்து குணமான பிறகு, மீண்டும் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து வந்தவர் நேற்று காலை திடீரென காலமானார்.

உமா மகேஸ்வரியின் இறுதிச் சடங்கு நேற்று மாலை நடந்தது. அவரது உடலுக்கு சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

13 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்