தடுப்பூசி குறைவாக இருப்பதால் நாளை நடக்க இருந்த - ‘மெகா’ முகாம் 19-ம் தேதிக்கு மாற்றம் :

By செய்திப்பிரிவு

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 104 சேவை மையத்தில் பணியாற்றும் மனநல ஆலோசகர்கள் மூலம், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன அழுத்தம் போக்கும் ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, இலவச அழைப்பு சேவை எண்ணாக 104-ஐ அறிவித்தார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் உள்ளமருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பணிபுரியும் 333 மனநல ஆலோசனை மருத்துவர்கள் மூலம், மாணவர்களுக்கு செல்போன் வழியாக ஆலோசனை வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது.

வரும் 17-ம் தேதி தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்நடைபெறுவதாக இருந்தது. தடுப்பூசி குறைவாக இருப்பதாலும், மத்திய அரசிடம் இருந்து போதியதடுப்பூசிகளை பெறும் பணி நடைபெறுவதாலும் அந்த முகாம் வரும் 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி முகாம் நடைபெறும். இதில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

30 mins ago

சினிமா

35 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்