தற்கொலை செய்துகொண்ட - மாணவர் தனுஷ் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் : ஓபிஎஸ், பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்தனுஷ் தற்கொலை செய்துகொண்டதற்கு திமுகவும், அதன் அரசும்தான் பொறுப்பு என்று அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திமுகவின் பொய்யான தேர்தல்வாக்குறுதியை நம்பி, நீட் தேர்வுநடைபெறாது என்று நம்பி மாணவர் தனுஷ் இருந்துள்ளார். ஆனால்,திமுக அரசால் நீட் தேர்வுக்குவிலக்கு பெற முடியவில்லை. இதனால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரதுமரணத்துக்கு திமுகவும், அதன் அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும். தனுஷ் குடும்பத்துக்கு அதிமுகசார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

எந்த துயரம் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு போராடி, தடைகளைத் தாண்டி வெற்றி பெற வேண்டும் என்ற போராட்ட குணத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாறாக, பெற்றோருக்கு காலமெல்லாம் மறக்கவே முடியாத துயரத்தை வழங்கிவிடக் கூடாது.

வாசிம் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்

வாணியம்பாடியில் கொல்லப்பட்ட வாசிம் அக்ரம் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

இந்தியா

43 mins ago

ஓடிடி களம்

44 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்