சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவுக்கு - எதிர்க்கட்சித் தலைவரை உரிய மரியாதையுடன் அழைத்தோம் : அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவரை உரிய மரியாதையுடன் அழைத்தோம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயல கத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் படத்திறப்பு விழாவில் திமுக பங்கேற்காததால், இந்த விழாவை புறக்கணித்ததாக கூறுகின்றனர். ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பிதழ் மட்டும்தான் அனுப்பினர்.

நாங்கள் அப்படியல்ல. இந்த விழாவை நடத்த திட்டமிட்டபோதே, முதல்வர் என்னை அழைத்து, எதிர்க்கட்சிகளின் தோழமையுடன் விழா நடக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரை நீங்களே அழைக்க வேண்டும் என கூறினார். நானும் பழனிசாமியை தொடர்பு கொண்டு, நீங்கள் வரவேண்டும் என்று முதல்வரும், நாங்களும் விரும்புகிறோம். விழாவில் பங்கேற்பது மட்டுமின்றி, நீங்கள் வாழ்த்துரை அளிக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போது அவர், மற்றவர்களிடம் பேசி விட்டு சொல்கிறேன் என்றார். அதன்பிறகு சட்டப்பேரவை செயலரிடம் விழாவுக்கு வரவில்லை என்று கூறிவிட்டார். நாங்கள் முழுமனதுடன் உரிய மரியாதை தரப்படும் என்று சொல்லி அவர்களை அழைத்தோம். ஆனால், அவர்கள் எங்களை அப்படியெல்லாம் அழைக்கவில்லை.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் நடுவர் மன்ற உத்தரவு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று கர்நாடக மாநில முதல்வர் கூறுவது ஏற்புடையதல்ல.

சென்னையில் சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் முடிக்கப்படும்.

தமிழகம் - கேரளா இடையே நதிநீர் பேச்சுவார்த்தை தொடர்பாக 2 அரசுகளாலும் அமைக்கப்பட்ட குழுவினர் இருமுறை பேசியுள்ளனர். அடுத்த அமர்வு கேரளாவில் நடக்க வேண்டும். இருமாநில பொதுப்பணித் துறை செயலர்களும் விரைவில் சந்தித்து தேதியை முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்