ரூ.1,330 கோடி மதிப்பிலான - நிலக்கரி கொள்முதல் டெண்டருக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி :

By செய்திப்பிரிவு

தமிழக மின் வாரியத்துக்கு ரூ.1,330கோடியில் நிலக்கரி கொள்முதல்செய்வதற்கான டெண்டருக்குதடை கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக மின் வாரியத்துக்கு ரூ.1,330 கோடியில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டது. ‘இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதால் வருவாய் குற்றப் புலனாய்வு இயக்குநரகத் தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அடங்கிய கூட்டு புலனாய்வுக் குழு அமைத்துவிசாரிக்க வேண்டும். டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரி மின்வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்குநேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த டெண்டர் திரும்பபெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைபதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டெண்டர் திரும்ப பெறப்பட்டு விட்டதால் இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என கூறி வழக்கைதள்ளுபடி செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்