அண்ணா பல்கலைக்கழகத்தில் விருப்பப் பாடமாக தமிழ் மொழி சேர்ப்பு - 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை : உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு­

By செய்திப்பிரிவு

ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10, 11, 12-ம்வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் பொறியியல், பாலிடெக்னிக், கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் துறைச் செயலர் கார்த்திகேயன் உட்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளுக்கான முதலாண்டு மாணவர் சேர்க்கை 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும். அதன்படி, 51 அரசு பாலிடெக்னிக்குகளில் சேர்க்கை பணிகள் விரைவில் தொடங்கும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்படுவதுபோல, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் 2 ஆண்டுகளுக்கான அரியர் தேர்வுகளை, கட்டணம் செலுத்தி எழுதிக் கொள்ளலாம்.

பேராசிரியர் நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சில பல்கலைக்கழகங்கள் மீது புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து முதல்வரிடம் கலந்துபேசி, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய முடிவுகள் வெளியான பின்னர், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை தொடங்கும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது விருப்பப் பாடங்களாக 8 பாடங்கள் உள்ளன. அதனுடன், நடப்பு கல்வியாண்டு (2021-22)முதல் 9-வது பாடமாக தமிழ்சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்கள்விருப்ப மொழியாக தமிழையும்தேர்வு செய்துகொள்ளலாம்.

கல்லூரிப் பேராசிரியர் பணிநியமனங்களை டிஎன்பிஎஸ்சிமூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

13 hours ago

மேலும்