தமிழகத்தில் புதிதாக 19,448 பேருக்கு கரோனா : முதியவர்கள் உட்பட 351 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 19,448 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 351 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 10,765, பெண்கள் 8,683 எனமொத்தம் 19,448 பேர் கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 2,564, ஈரோட்டில் 1,646, சென்னையில் 1,530, திருப்பூரில் 1,027பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்து 56,681 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 4 லட்சத்து 91,462 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 19 லட்சத்து 97,299 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றுமட்டும் சென்னையில் 3,713 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 31,360பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் 29,268, சென்னையில் 19,184, திருப்பூரில் 18,849 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 32,026 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட நேற்று ஒரே நாளில் 351 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 40 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27,356 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5 லட்சத்து 18,162, கோவையில் 1 லட்சத்து 90,593, செங்கல்பட்டில் 1 லட்சத்து 47,209, திருவள்ளூரில் 1 லட்சத்து 5,342 என்றஎண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்