ஊரடங்கு அமல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்:

தமிழகத்தில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத வேகத்தை எட்டியுள்ளது. தற்போதைய கட்டுப்பாடுகள் கரோனா பரவலைத் தடுக்க உதவாது என்பதுதான் யதார்த்தம். இனியாவது முழு ஊரடங்கு போன்ற கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கரோனாவை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றதாகிவிடும். முதலில் இரு வாரங்களுக்கு ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்தி, பின்னர் கூடுதலாக இன்னொரு வாரம் ஊரடங்கை செயல்படுத்துவதன் மூலம், கரோனா வைரஸ் பரவலை நிச்சயமாக கட்டுப்படுத்திவிட முடியும். ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதால் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்புகளை அரசுதான் ஈடுகட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்