டாஸ்மாக் கடைகளில் - ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை :

By செய்திப்பிரிவு

டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் தினமும் ரூ.90 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். வார இறுதி நாட்களில் விற்பனை சற்று அதிகரிக்கும்.

கரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் டாஸ்மாக் கடைகளின் வேலை நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு, இரவு 9 மணி வரை விற்பனை நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று உழைப்பாளர் தினம் மற்றும் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என்பதால், மது அருந்துபவர்கள் டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் பகல் 12 மணி முதலே 2 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.292.09 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின.

மண்டலங்களை பொருத்தவரை அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.63.44 கோடிக்குமதுபானங்கள் விற்பனையாகின. அதற்கு அடுத்தபடியாக மதுரையில் ரூ.59.63 கோடி, திருச்சியில் ரூ.56.72கோடி, கோவையில் ரூ.56.37 கோடி,சேலத்தில் ரூ.55.93 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்