கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில் - கைத்துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (29). இவருக்கு காவல்துறையில் 2013-ல் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டில் பணி வாய்ப்பு கிடைத்தது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியில் சேர்ந்த இவர் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு துப்பாக்கியுடன் கூடிய காவலராக பணியில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல பணிக்கு சென்ற அன்பரசன், மீண்டும் வீட்டுக்குச் செல்லவில்லை. குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

இதனிடையே நேற்று காலை நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொண்ட பணியாளர் நீதிமன்றத்தின் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டில் தலையின் வலதுபுறம் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் அன்பரசன் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.

எஸ்பி பண்டிகங்காதர் மற்றும் போலீஸார் அங்கு வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகே கிடந்த கைத்துப்பாக்கியையும் மீட்டனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “அன்பரசனுக்கும், ராயக்கோட்டை அருகே உள்ள பழையூரைச் சேர்ந்த அருணா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அருணா தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். தம்பதி இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. யுகாதி பண்டிகைக்காக தாய் வீட்டுக்கு சென்ற அருணா, மீண்டும் வராததால் மனஉளைச்சலில் இருந்த அன்பரசன், கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 mins ago

க்ரைம்

48 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

56 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்