எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதா? - காப்பீட்டுக் கழக ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தினர், சென்னை எல்ஐசி கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த, நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் எல்ஐசியின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

சென்னை எல்ஐசி முன்பு..

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தினர், சென்னையில் எல்ஐசி கட்டிடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பங்கேற்ற சங்கத்தின் பொதுச் செயலர் எஸ்.ரமேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“இந்தியாவின் தலைசிறந்த பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும். காப்பீட்டுதுறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும்” என்றுமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்த 2 அறிவிப்புகளை கண்டித்தும், அவற்றை கைவிடக் கோரியும் நாடு முழுவதும் உள்ளஎல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் உள்ளிட்டோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். சென்னையில் எல்ஐசி கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

எல்ஐசி நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

37 mins ago

கருத்துப் பேழை

30 mins ago

கருத்துப் பேழை

38 mins ago

சினிமா

3 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

9 hours ago

மேலும்