சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே போக்குவரத்து ஊழியர்களுக்குபுதிய ஊதிய ஒப்பந்தம் அரசுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

போக்குவரத்து தொழிலாளர்களுக் கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போக்குவரத்து தொழிலாளர்களின் புதிய ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 18-ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அண்ணாதொழிற் சங்கம் அப்போது முன்வைத்திருக்கிறது. இன்னும் சிலஅமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.

இதனால், தொழிலாளர் மத்தியில் தாங்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்படுவோமா, அல்லது தற்போதுள்ள ஒப்பந்தம் போடப்படுமா என தேவையற்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

புதிய ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு முன்பு, கடந்தஊதிய ஒப்பந்தங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில கோரிக்கைகள்தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், 240 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதியை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினோம். விரைவில் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊதிய ஒப்பந்தத்தைஏற்படுத்த வேண்டும். கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் நாளை (23-ம்தேதி) சென்னையில் நடக்கும் கூட்டத்தில் வேலைநிறுத்தத்துக் கான தேதியை அறிவிக்கவுள்ளோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

16 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

36 mins ago

ஓடிடி களம்

29 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்