முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதுதலைமை கண்காணிப்புக் குழு தகவல்

By செய்திப்பிரிவு

கூடலூர்: பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது அணையைக் கண்காணித்துப் பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை நியமித்தது.

இதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். தமிழக அரசின் பிரதிநிதியாகப் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் மணிவாசன், கேரள மாநிலப் பிரதிநிதியாக நீர்வளத் துறைச் செயலர் டி.கே.ஜோஸ் உள்ளனர். கடந்த ஆண்டு ஜன.28-ம் தேதி இக்குழு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது. இந்நிலையில் நேற்று இக்குழுவினர் அணையை மீண்டும் ஆய்வு செய்தனர். 21 ஆண்டுகளுக்குப் பிறகு அணைக்கு மின்வசதி கிடைத்துள்ளதால் 13 மதகுகளையும் இயக்கி பரிசோதனை செய்து அணை பலமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

இந்தியா

43 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

52 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்