வட தமிழக ஆர்எஸ்எஸ் தலைவராக மீண்டும் கே.குமாரசாமி தேர்வு

By செய்திப்பிரிவு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் வட தமிழக மாநிலத் தலைவராக கே.குமாரசாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் வட தமிழகம், தென் தமிழகம்என்று தமிழகம் இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10-ம் தேதி தென் தமிழக ஆர்எஸ்எஸ் தலைவராக ராமநாதபுரத்தை சேர்ந்த ஆடலரசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக சென்னை சேத்துப்பட்டில் உள்ளஆர்எஸ்எஸ் வட தமிழக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில் வட தமிழக மாநிலத் தலைவராக கே.குமாரசாமி மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேலத்தை சேர்ந்த குமாரசாமி, அரசுக் கலைக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, முதல்வராக ஓய்வுபெற்றவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் கடந்த 53 ஆண்டுகளாக இருந்துவரும் அவர், ஷாகா (ஆர்எஸ்எஸ் கிளை) பயிற்சியாளர் தொடங்கி, மாவட்ட, கோட்ட செயலாளர், மாநிலச் செயலாளர், மாநில இணை தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர் என்று ஆர்எஸ்எஸ் மாநில ஊடகப் பிரிவுச் செயலாளர் பா.நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்