கல்லூரிகள் திறப்பது பற்றி அதிகாரிகள் பரிசீலனை

By செய்திப்பிரிவு

கல்லூரிகளில் 1, 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா பரவலால்கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பருவத்தேர்வுகள் இணையவழியில் நடத்தப்பட்டன. இதற்கிடையே கல்வியாண்டு தாமதத்தை கருத்தில் கொண்டு முதுநிலை, இளநிலை படிப்புகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிச.7-ம்தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து இளநிலை, முதுநிலை படிப்புகளில் பிற ஆண்டுகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகளை திறக்க தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக கூறப்படுகிறது. தற்போது நடந்துவரும் இணைய வழி பருவத்தேர்வுகள் முடிந்தபின் கல்லூரிகளை திறக்கப்படலாம் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்